18ஆவது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22ஆம் திகதி ஆரம்பித்த இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள 69ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
இரு அணிகளும் ப்ளே ஓப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்டன. இருப்பினும் புள்ளி பட்டியலில் 2ஆம் இடத்தை பிடிப்பதற்கு இந்த போட்டியின் முடிவு அவசியமாகும்.
