6,000 கோடி மதிப்பிலான கூகுள் பங்குகளை நன்கொடையாக கொடுத்த அமெரிக்கர்…!

உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமாக கூகுள் செயல்படுகிறது. இதன் நிறுவனர்களுள் ஒருவரும் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றவருமான செர்ஜி பிரின் 700 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை தானமாக வழங்கியிருக்கிறார்.

தன்னுடைய பங்குகளில் கணிசமான பகுதியை கேட்டலிஸ்ட்4 என்ற தொண்டு அமைப்பிற்கு வழங்கியிருக்கிறார். இது செர்ஜி பிரினால் தொடங்கப்பட்ட ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனம் நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது. அதேபோல பருவநிலை மாற்ற பாதிப்புகளை தீர்ப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கிறது. அதேபோல 5,80,000 ஆல்பாபெட் பங்குகளை தன்னுடைய குடும்பத்திற்கு சொந்தமான அறக்கட்டளைக்கு இவர் தானமாக வழங்கியிருக்கிறார்.

அடுத்ததாக மைக்கேல் ஜே பாக்ஸ் அறக்கட்டளைக்கு 2,82,000 பங்குகளை இவர் தானமாக வழங்கிருக்கிறார். இந்த அறக்கட்டளை பார்க்கின்சன் நோய் மருந்து குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது.

தொடர்ச்சியாக தன்னுடைய வருமானத்தில் கணிசமான பகுதியையும் தனக்கு சொந்தமாக இருக்கும் ஆல்பபெட் பங்குகளையும் இதுபோல தானமாக வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் செர்ஜி பிரின்.

2004 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை செர்ஜி பிரின் தனக்கு சொந்தமாக இருந்த சுமார் 11 பில்லியன் பங்குகளை இதுபோல தானமாக வழங்கியிருக்கிறார் என்பது தெரிய வருகிறது. செர்ஜி பிரின் 2019 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

இருந்தாலும் தொடர்ந்து கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் வாரிய உறுப்பினர்களுள் ஒருவராக இருந்து வருகிறார். 6,000 கோடி ரூபாயை தானமாக வழங்கிய பின்னரும் இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இவர் தொடர்ந்து எட்டாவது இடத்தில் இருக்கிறார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles