வீதி விபத்துக்களால் கடந்த 24 மணிநேரத்திற்குள் நால்வர் உயிரிழப்பு

நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கேகாலை, வாழைச்சேனை, மாத்தளை மற்றும் கெக்கிராவ ஆகிய இடங்களில் இந்த விபத்துகள் பதிவாகியுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கேகாலை-பெரகலை வீதியில் மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் 53 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.

வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 85 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

இதற்கிடையில், மாத்தளை-வத்தேகம வீதி உக்குவெல பகுதியில், முச்சக்கர வண்டி சாரதியொருவர் கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறமாகச் சென்று கார் மீது மோதியதில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்தார்.

கெகிராவ-தம்புள்ள வீதியில் அலகமுவ பகுதியில் கண்டியிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற பஸ் ட்ராக்டரில் மோதியதில் 49 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles