அமெரிக்கா சென்ற விமானத்தில் நடுவானில் கதவைத் திறக்க முயன்றவரால் பரபரப்பு

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற நபரால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

All Nippon Airways விமான சேவை Flight 114 வேறு வழியின்றி அவசரமாகத் தரையிறங்கியது.

ஜப்பானின் டோக்கியோ நகரிலிருந்து அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்திற்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் அந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கட்டுப்படுத்த முடியாத பயணி ஒருவரால் அவசரமாக சியட்டல் நகரில் தரையிறங்கியதாக விமான நிறுவனம் தெரிவித்தது.

அந்த நபருக்கு மருத்துவ நெருக்கடி ஏற்பட்டதாகவும் அவர் பயணிகள், பணியாளர்களால் பிடித்து வைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவர் மீது குற்றஞ்சாட்டப்படுமா என்பது தெரியவில்லை.

இறுதியில் விமானம் 4 மணி நேரம் தாமதமாக டெக்சஸின் ஹூஸ்டன் நகர் சென்றடைந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles