காலையில் எழுந்தவுடன் சில அறிகுறிகள் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதையும், இதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் பலரும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப்பழக்கமும் இதய நோய் பிரச்சனையை ஏற்படுகின்றது.

மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு உடலில் தோன்றும் சில அறிகுறிகளை வைத்து நாம் முன்னெச்சரிக்கையாக இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம்.

காலை எழுந்தவுடன் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் இதய தொடர்பான பிரச்சனைக்கு முக்கிய அறிகுறியாக இருக்கலாம்.

காலையில் எழுந்ததும் அசௌகரியமாக உணர்தல் மற்றும் மார்பு வலி மற்றும் இறுக்கம் ஏற்படுவது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

காலையில் எழும்பும் போது சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சனை இருந்தால், அதனை பொருட்படுத்தாமல் விடக்கூடாது. உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

காலையில் எழுந்ததும் வாந்தி மற்றும் குமட்டல் காணப்பட்டால் மாரடைப்பிற்கான அறிகுறியாகும்.

இரவில் நன்றாக தூங்கினாலும், காலையில் எழும்பும் போது சோர்வாக உணர்ந்தால், இதய தொடர்பான பிரச்சனையின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

காலையில் தொடர்ந்து தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டால் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here