சீனாவிலுள்ள இரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு சம்பவம் : 5 பேர் பலி – பலர் காயம்..!

சீனாவின் இரசாயன தொழிற்சாலையொன்றில் நேற்று இடம்பெற்ற பெரிய வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாக, சீன அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு ஷான்டாங் மாகாணத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

200க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்கள் ஷான்டாங் யூடாவ் இரசாயன தொழிற்சாலைக்கு மீட்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

பூச்சிக்கொல்லிகள், மருந்துகள் மற்றும் இரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles