சுவிட்சர்லாந்தில் பொலிஸ் கஸ்டடியில் உயிரிழந்த வெளிநாட்டவர்…!

சுவிஸ் மாகாணமொன்றில், வெளிநாட்டவர் ஒருவர் பொலிஸ் கஸ்டடியில் உயிரிழந்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்திலுள்ள Lausanne நகரில், ஆப்பிரிக்க நாட்டவரான 39 வயது இளைஞர் ஒருவர் போதைப்பொருள் குற்றத்துக்காக பொலிஸ் காவலில் அடைக்கப்பட்டிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமையன்று அவர் பொலிஸ் காவலில் இருக்கும்போதே உயிரிழந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, ’கொல்லும் மாகாணம்’ என எழுதப்பட்ட பதாகைகளுடன் மக்கள் பொலிஸ் நிலையம் முன் திரண்டதால் பரபரப்பு உருவானது.

விடயம் என்னவென்றால், Vaud மாகாணம் ஏற்கனவே இதுபோன்ற பொலிஸ் நிலைய மரணங்கள் தொடர்பில் கடும் விமர்சனத்துள்ளாகியுள்ளது.

2016க்கும் 2021க்கும் இடையில், வெள்ளையரல்லாத நான்கு பேர் இதேபோல பொலிஸ் காவலில் மரணமடைய, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles