தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் காரணமாக, காற்றின் வேகம் அதிகமாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள, கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாகக் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிலாபம் முதல் கொழும்பு வழியாக காலி வரையிலும், காங்கேசன்துறை முதல் முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், அந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகக் கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, குறித்த கடற்கரை பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், அந்தக் கடல் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களும், கடல்சார் சமூகத்தினரும் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும், மறு அறிவிப்பு வரும் வரை இந்தக் கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here