அமெரிக்காவில் கல்வி கற்கும் சீன மாணவர்களின் விசாக்கள் உடனடி ரத்து..!

அமெரிக்காவில் கல்வி கற்றுவரும் சீன மாணவர்களின் விசாக்களை உடனடியாக ரத்து செய்வதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவர்களும், முக்கியமான துறைகளில் கல்வி கற்பவர்களும் இதில் அடங்குவதாக, அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் சீனா மற்றும் ஹொங்கொங்கிலிருந்து விசாவுக்காக விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் 280,000 சீன மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி கற்றுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டவர்களில் அதிகமானோர், சீனாவைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.

இந்தநிலையில், கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட சில காரணங்களால் 2 நாடுகளுக்கும் இடையிலான உறவு தற்போது மோசமடைந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles