ஒழுக்கமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பு : ஜனாதிபதி..!

ஒழுக்கமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை ருஹுனு மாகம்புர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ‘ஓமல்பே சோபித தேரரின் 75 ஆவது ஜனன தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒழுக்கயீனத்தின் எல்லை வரை சென்று கொண்டிருந்த நாட்டை மீண்டும் ஒழுக்க நிலைக்குக் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டத்தில், மகா சங்கத்தினருக்குப் பெரும் பொறுப்பு உள்ளதாகவும், அரசாங்கம் என்ற வகையில் அதற்காக எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் உரிய வகையில் முன்னெடுப்பதாகவும், ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

நாட்டிற்குள் எதிர்பார்க்கப்படும் ஒழுக்கத்தின் புதிய திருப்பத்தை, அரசியல் முறையின் மாற்றத்தில் மாத்திரம் செய்ய முடியாது.

பெறுமதி மிகுந்த ஒழுக்கக் கட்டமைப்பு மற்றும் பெறுமதியின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட சமூக பிணைப்புகளுக்கும் அந்த பணி சார்ந்துள்ளதாகவும், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles