சுவீடனில் கார் உற்பத்தி நிறுவனத்தின் திடீர் தீர்மானம் – 3,000 பேர் நீக்கம்

சுவீடனில் உள்ள கார் உற்பத்தி நிறுவனமான Volvo Cars 3,000 பேரை ஆட்குறைப்பு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

செலவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த நடவடிக்கை காணப்படும் என கூறப்படுகின்றது.

சுவீடனில் உள்ள அலுவலகத்தில் வேலைசெய்வோர் பெரும்பாலும் பாதிக்கப்படுவர் என நிறுவனம் தெரிவித்துள்ளது.. அதன் ஊழியரணியில் சுமார் 15 சதவீதமானோர் அலுவலகத்தில் பணிபுரிகின்றனர்.

கடந்த மாதம் 1.9 பில்லியன் டொலர் மதிப்பிலான செயல்திட்டத்தை Volvo Cars நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த முடிவை எடுப்பது மிகக் கடினமாக இருந்ததாக நிறுவனம் கூறியது.

ஆனால் மீள்திறன்மிக்க வலுவான நிறுவனத்தை உருவாக்க இவை முக்கியம் என்று நிறுவனத்தின் உயரதிகாரி கூறினார். சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதம், உலகளவில் விற்பனை 11 விழுக்காடு குறைந்ததாக நிறுவனம் முன்னர் கூறியிருந்தது.

நிஸான் நிறுவனம் உலகளவில் மேலும் 11,000 வேலைகளைக் குறைக்கவிருப்பதாய் இம்மாதத் தொடக்கத்தில் கூறியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles