செக் குடியரசு நாட்டு தகவல் தொடர்பு கட்டமைப்பு மீது சீனா சைபர் தாக்குதல் நடத்த முயற்சி செய்த்ததாக செக் குடியரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை கூறுகையில்

எங்கள் நாடு மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்த சைபர் குற்றவாளிகளை அம்பலப்படுத்துகிறோம். இதன் பின்னணியில் சீனா உள்ளது. சீனா எங்கள் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கிறது. சைபர் தாக்குதல் மூலம் எங்கள் தகவல்களை திருடி, அதை வேறு வகையில் தவறான பிரச்சாரத்தை முன்னெடுக்க பார்க்கிறார்கள்.

இதற்கு எதிராக நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இதை நம் வெளியுறவுத்துறை அமைச்சரகம் கண்டறிந்துவிட்டது. இந்த நடவடிக்கையை நாம் கடுமையாக கண்டிக்கிறோம்.” என்று கூறியுள்ளனர். மேலும் அந்த நாட்டுக்கான சீன தூதருக்கு அழைப்பாணை அனுப்பி நேரடியாக விசாரணை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து செக் குடியரசு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் லிவாப்ஸ்கி, “இதுபோன்ற சட்ட விரோத செயல்கள் இரு நாட்டு உறவை கடுமையாக பாதிக்கும். இது சீனாவின் நம்பக்கத்தன்மையை கேள்வி குறியாக்கியுள்ளது.” என்று தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

சீனா மீது செக் குடியரசு வெளியிட்டுள்ள இந்த குற்றச்சாட்டுக்கு பெல்ஜியம், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ நாடுகள் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் செக் குடியரசுக்கு ஆதரவு தெரிவித்து, சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் அமெரிக்காவும் இடம் பெற்றுள்ளது.

அமெரிக்கா இந்த விவகாரத்தில் வெளிப்படையாக செக் குடியரசுக்கு ஆதரவு சொல்லி, “சீனாவுக்கு கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இதேபோல பல உலக நாடுகளும், “உலக விதிகளை மீறி இப்படி சைபர் தாக்குதல் நடப்பதை எந்த வகையிலும் பொறுத்துக் கொள்ள முடியாது.” என்று சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here