ட்ரம்பிற்கு வரிகளை அமுல்படுத்த அதிகாரம் இல்லை – அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வரிகளை அமுல்படுத்த அதிகாரம் இல்லை என, அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குத் தீர்வை வரியை அதிகரித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

எனினும், அவர் எந்த நாட்டுக்கு எதிராகவும் அமுல்படுத்திய அல்லது அமுல்படுத்துவதாக அச்சுறுத்திய தீர்வை வரி அதிகரிப்புகள் செல்லுபடியாகாதென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ட்ரம்பின் குடியரசுக் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள காங்கிரஸுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here