பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 37 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

லாகூரில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது.

202 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி, 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 164 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக பாகிஸ்தான் அணியின் சதாப் கான் தெரிவு செய்யப்பட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here