சீரற்ற வானிலையால் பல குடும்பங்கள் பாதிப்பு

இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காரணமாக, நேற்று (29) மாலை முதல் இலங்கையின் பல பகுதிகளில் கடுமையான மழைவீழ்ச்சியும், பலத்த காற்று நிலையும் பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக, தற்போது 485 குடும்பங்களைச் சேர்ந்த 1,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 9 மாவட்டங்களில் மழை மற்றும் காற்று நிலைகளால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது, 3 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் 365 வீடுகளுக்கு பகுதியளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காற்று நிலையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால், பல வீதிகளில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles