எஹெலியகொடயில் வாள் வெட்டு தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு

எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெதுர சந்தியில் உள்ள ரயில் பாதைக்கு அருகில் நேற்று (30) இரவு, மூன்று பேர் மீது ஒரு குழு வாள்களால் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த மூவரும் எஹெலியகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் இடமல்கொட பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்த மற்ற இருவர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்ய எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles