நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று சனிக்கிழமை (31) மாலை 04.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (01) மாலை 04.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பின்வருமாறு :

காலி மாவட்டம் – பத்தேகம பிரதேச செயலக பிரிவு
கேகாலை மாவட்டம் – அரநாயக்க
நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ, நோர்வூட் ஆகிய பிரதேச செயலக பிரிவுகள்
இரத்தினபுரி மாவட்டம் – இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவு
கண்டி மாவட்டம் – மேல் கோரளை பிரதேச செயலக பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here