சிரிய ஏவுகணை கிடங்கு மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்

சிரியாவின் லடாகியா பகுதியில் உள்ள ஏவுகணை கிடங்குகள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் திடீரென வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளன. மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்த இடத்தில் நடந்த இந்த தாக்குதலில், ஒருவர் பலியாகி உள்ளார் என கூறப்படுகிறது.

சர்வதேச நாடுகள் மற்றும் இஸ்ரேல் நாட்டின் சுதந்திர இயக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்க கூடிய ஏவுகணைகள் இந்த கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளன என கூறப்படுகிறது. நிலப்பரப்பில் இருந்து வான்வெளியில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் இருந்துள்ளன.

இந்த பகுதியில், சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தொடர்ந்து தன்னுடைய வேலையை செய்யும்.

இஸ்ரேலுக்கும் அதன் குடிமக்களுக்கும் ஏற்பட கூடிய எந்தவித அச்சுறுத்தலையும் ஒழிப்பதற்கான பணியில் இஸ்ரேல் ஈடுபடும் என அதுபற்றி இஸ்ரேல் படைகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles