இலங்கையில் முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட வீரர்களில் 2,261 பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது .

அத்தோடு, கடற்படையைச் சேர்ந்த 194 பேரும், விமானப்படையைச் சேர்ந்த 198 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இலங்கை பொலிஸ் பிரிவில் தப்பியோடிய 330 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here