சுமார் 1,100க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கில கால்வாயை கடந்து இங்கிலாந்துக்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.

இவ்வாண்டு சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைய முற்பட்ட ஒரே நாளிலான அதிக எண்ணிக்கை இதுவாக பதிவாகியுள்ளது.

18 சிறிய படகுகளில் அவர்கள் பயணம் செய்ததாக அதிகாரிகள் கூறினர்.

அவர்களையும் சேர்த்து இந்த ஆண்டில் இதுவரை சுமார் 14,800 பேர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்றனர் என்று அதிகாரிகள் கூறினர்.

கடந்த ஆண்டு மே மாதத்தில் பதிவான எண்ணிக்கையைவிட அது 42 சதவீதம் அதிகமாகும்.

இதுவரை ஒரே நாளில் ஆங்கில கால்வாயை மிக அதிகமாக 1,305 பேர் தாண்டியுள்ளனர்.

2022ஆம் ஆண்டில் மிக அதிகமாக ஒரே ஆண்டில் 45,000க்கும் அதிகமானோர் அந்தக் கால்வாயைக் கடந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here