தமது சொத்தில் பெரும்பகுதி ஆப்பிரிக்காவில் சுகாதார, கல்விச் சேவைகளை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும் என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

சுகாதாரம், கல்வி முன்னேற்றம் முதலியவற்றின் மூலம் ஆப்பிரிக்காவில் உள்ள ஒவ்வொரு நாடும் செழிப்பை நோக்கிச் செல்ல வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு மூலம் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்தும் வழிகளைச் சிந்திக்கும்படி அவர் இளையர்களைக் கேட்டுக்கொண்டார்.

எத்தியோபியாவில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைமையகத்தில் அவர் அந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

அடுத்த 20 ஆண்டுகளில் தமது சொத்தில் 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்கபோவதாக கேட்ஸ் சென்ற மாதம் கூறியிருந்தார்.

2045ஆம் ஆண்டுக்குள் தமது சொத்தின் மதிப்பு 200 பில்லியன் டொலரை எட்டிவிடும் என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here