கமத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

உள்நாட்டு பால் உற்பத்தி தொழிற்துறையை செயல்திறன் மற்றும் வினைத்திறனுள்ள வர்த்தகமாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் கமத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மில்கோ நிறுவனம் மற்றும் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை ஆகியவற்றை வினைத்திறன் மற்றும் செயல்திறனுள்ள வர்த்தகங்களாக உருவாக்குவது குறித்து அதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

செலவினங்களைக் குறைத்து தற்போதுள்ள வளங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதன் மூலம் சந்தையை மையமாகக் கொண்ட வினைத்திறன் மற்றும் செயல்திறன் வாய்ந்த வர்த்தகமாக உள்நாட்டு பால் தொழிற்துறையை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles