கொழும்பு மாநகர சபையின் முதலாவது அமர்வுக்கான நாள் அறிவிப்பு

கொழும்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு ஜூன் 16 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவித்து அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவிப்பு, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தரவால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு மாநகர சபையின் கன்னி அமர்வு ஜூன் 16 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

நகர சபை மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் முதல் அலுவலாக புதிய மாநகரசபை மேயர் மற்றும் பிரதி மாநகரசபை மேயர் தேர்ந்தெடுப்படவுள்ளனர்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் எந்தக் கட்சியும் முழுமையான பெரும்பான்மையைப் பெறாத நிலையில், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டும் மாநகரசபை மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கு பிற அரசியல் குழுக்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளன.

இதற்கிடையில், மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில், மேலும் 20 உள்ளூராட்சி நிறுவனங்களின் கன்னி அமர்வுகள் ஜூன் மாதத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles