இரண்டாம் உலகப் போரின் போது வீசிய வெடிக்கப்படாத மூன்று குண்டுகளை செயலிழக்கச் செய்ய நிபுணர்கள் முயற்சித்து வருவதால், ஜெர்மன் நகரமான கொலோனில் சுமார் 20,000 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

குறித்த குண்டுகளை செயலிழக்கச் செய்வற்காக1,000 மீற்றரை அபாயவலயமாக கருத்திற்கொண்டு சுற்றி வளைத்து மூடப்பட்டுள்ளது.

கொலோனின் பழைய நகரம் மற்றும் டியூட்ஸ் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் வீடுகள் வெறுமையாக உள்ளதா என்பதை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று சரிபார்த்து வருகின்றனர். இதேவேளை இந்நடவடிக்கை போருக்குப் பின்னரான மிகப்பெரிய வெளியேற்றமாக கருதப்படுகின்றது.

வெளியேற்றப்பட்ட மக்கள் தங்குவதற்காக இரண்டு தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போரின் போது கொலோனில் 1.5 மில்லியன் குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சுமார் 20% குண்டுகள் முழுமையாக வெடிக்கவில்லை என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

இரண்டாம் உலகப் போரின்போது ரோயல் விமானப்படையால் ‘1,000 குண்டுவீச்சுத் தாக்குதலை’ அனுபவித்த முதல் ஜெர்மன் நகரம் கொலோன் ஆகும். மே 30, 1942 அன்று ஒரே இரவில் சுமார் 1,400 தொன் குண்டுகள் வீசப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here