ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று (07) அதிகாலை 1.05 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் 126 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 36.50 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 67.82 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக அதிகாலை 12.56 மணியளவில் ரிக்டரில் 4.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில அதிர்வால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles