இந்தியாவில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,755 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புதிய கொவிட் அலையின் தாக்கம் காரணமாக கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம், புதிதாக 319 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரளாவில் 1,806 தொற்றாளர்களும், குஜராத்தில் 717 தொற்றாளர்களும், டெல்லியில் 655 தொற்றாளர்களும், மேற்கு வங்காளத்தில் 622 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அதேநேரம், மகாராஷ்டிராவில் இதுவரையில் 577 தொற்றாளர்களும்,  தமிழ்நாட்டில் 194 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிய கொவிட் அலையின் தாக்கம் காரணமாக  இதுவரையில் 59 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here