சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் கயாடு லோஹர்.

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ‘அமரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடிக்கிறார். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்தில் நடித்து வருகிறார்.

இதை தவிர இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிவகார்த்திகேயன் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இது குறித்த அறிவிப்பை சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்வில் வெங்கட் பிரபு வெளியிட்டார். இந்த படம் டைம் டிராவல் கதையில், காதல் கதைக்களத்தில் உருவாக உள்ளது. மேலும் இதில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளனர்.

இந்த நிலையில், அதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல நடிகை கயாடு லோஹர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிபார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles