தம்பதிகள் அதிக வேலைப்பளுவால் பாதிக்கப்பட்டு பொறுப்புகளை சுமக்கும்போது, பரஸ்பர காதல் காலாவதி ஆகிறது.

தம்பதியர் தமக்குள் எழும் பிரச்சனைகளை தாமே தீர்த்துக்கொள்ள முயல வேண்டுமே தவிர, வெளியில் உள்ள வேறு யாராலும் அது முடியாது.

தம்பதியர் பலரிடம், திருமண தொடக்கத்தில் இருக்கும் நெருக்கமும், ஈர்ப்பும் நாளடைவில் குறைந்துவிடுகின்றன. ‘ரொமான்ஸ்’ என்பதே இல்லாமல் போய்விடுகிறது. இந்நிலைக்கு காரணம் என்ன? பின்வரும் விஷயங்கள்தான்…

பேச்சுவார்த்தை இல்லாமை

தம்பதியர் இடையே போதிய பேச்சுவார்த்தை, தொடர்பு இல்லாமை, நெருக்கத்தை குறைக்கிறது. தம்பதிகள் இருவரும் தங்களுக்குள் வெளிப்படையாகப் பேச வேண்டும். அப்போதுதான் திருமண உறவு பலப்படும். தகவல்தொடர்பு முறிவு, தவறான புரிதலுக்கும், ஏமாற்றத்துக்கும் வித்திடும்.

மன அழுத்தம், அவசரம்

வருடங்கள் செல்லச் செல்ல, திருமண உறவில் ரொமான்ஸ் குறைந்து விடும். இதற்கு முக்கிய காரணம், துணையில் ஒருவர் அல்லது இருவரின் வேலைப்பளு அல்லது மனஅழுத்தமாக இருக்கலாம். மன அழுத்தமும், வேலைப்பளுவும் மண உறவை பாதிக்கும் காரணிகளாக மாறிவருகின்றன. தம்பதிகள் அதிக வேலைப்பளுவால் பாதிக்கப்பட்டு பொறுப்புகளை சுமக்கும்போது, பரஸ்பர காதல் காலாவதி ஆகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here