கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம்..!

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

தற்போது அவருக்கு எதிராக ஆணைக்குழுவால் நடத்தப்படும் ஊழல் குறித்த விசாரணைகள் தொடர்பில் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை 10 மணியளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles