ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை, ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜேர்மனியின் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின்போது, வர்த்தகம், இலத்திரனியல் பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட துறைகளில், ஒத்துழைப்புக்கான புதிய வழிகள் உள்ளிட்ட இரு தரப்பு ஆர்வமுள்ள பல விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்படவுள்ளன.

இதன்போது ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத்துறைசார் தொழிற்சங்கங்களை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles