உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நாளை ஆரம்பம்..!

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது.

லண்டன் லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகும் இந்தப் போட்டியில், தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா டெஸ்ட் அணிகள் மோதுகின்றன.

2023 முதல் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் டெஸ்ட் அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்ட போட்டிகளின் அடிப்படையில், இந்த 2 அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.

இந்தநிலையில், 2023 ஜூனில், ஓவல் மைதானத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்தியாவைத் தோற்கடித்த அவுஸ்திரேலியா, இந்தப் போட்டியிலும் அதனைத் தக்கவைக்க முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், தென்னாபிரிக்கா 2 தசாப்தங்களுக்கும் மேலாக தமது கனவாக இருக்கும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிண்ணத்தை வெற்றி கொள்ள முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles