இந்திய கேரள மாநிலத்திற்கு அருகே அரபிக் கடலில் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்திய கடலோர காவல்படை தொடர்ந்து முயற்சித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையின் கொழும்பு துறைமுகத்திலிருந்து இந்தியாவின் மும்பை நகருக்குச் சென்று கொண்டிருந்த எம்.வி. வான் ஹை 503 என்ற கப்பலில் நேற்று (09) உள் வெடிப்பு ஏற்பட்டதால், கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.

கப்பலில் இருந்த 22 பணியாளர்களில் 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் இருந்து கப்பலின் பணியாளர்களை மீட்க சிங்கப்பூரும் ஒரு குழுவை அனுப்பியுள்ளது.

மீட்கப்பட்ட 18 பணியாளர்களில் சிலர் காயமடைந்துள்ளனர், அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் நான்கு பணியாளர்களைக் காணவில்லை என்று கூறியது, இதில் இரண்டு தைவான் நாட்டவர்கள், ஒருவர் மியான்மர் நாட்டவர் மற்றும் ஒருவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள்.

இதற்கிடையில், இந்தியாவின் தேசிய கடல் தகவல் சேவையும் கேரள கடற்கரைக்கு எண்ணெய் கசிவு மற்றும் குப்பைகள் ஏற்படும் அபாயம் காரணமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில், கப்பலில் இருந்து 50 கொள்கலன்கள் கடலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here