சுவிட்சர்லாந்தில் பொலிஸ் கஸ்டடியில் உயிரிழந்த வெளிநாட்டவர் : பேரணியில் இறங்கிய ஆயிரக்கணக்கான மக்கள்

பொலிஸ் கஸ்டடி மரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான மக்கள் சுவிஸ் நகரமொன்றில் பேரணி நடத்தினார்கள்.

சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்திலுள்ள லோசான் நகரில் சனிக்கிழமை மதியம் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி ஒன்றை நடத்தினார்கள்.

நைஜீரியா நாட்டவர் ஒருவர் பொலிஸ் கஸ்டடியில் உயிரிழந்ததையடுத்து பொலிஸ் வன்முறைக்கு எதிராக மக்கள் பேரணியில் இறங்கினார்கள்.

கடந்த சில ஆண்டுகளில் Vaud மாகாணத்தில் கருப்பினத்தவர்கள் நான்கு பேர் பொலிஸ் வன்முறைக்கு பலியானதை சுட்டிக்காட்டிய பேரணியை ஒழுங்கு செய்தவர்களில் ஒருவரான ஒரு பெண், பொலிசார் மீண்டும் ஒருவரைக் கொன்றுவிட்டார்கள் என ஒலிபெருக்கியில் அறிவித்தார்.

உயிரிழந்த நபர் குடும்பத்துக்கு நீதி வேண்டும் என்றும் பேரணியில் ஈடுபட்டவர்கள் கோரியுள்ளார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles