Home Main News Sri Lanka யாழில் வீட்டில் சட்டவிரோத கருக்கலைப்பால் பெண் உயிரிழப்பு

யாழில் வீட்டில் சட்டவிரோத கருக்கலைப்பால் பெண் உயிரிழப்பு

0
யாழில் வீட்டில் சட்டவிரோத கருக்கலைப்பால் பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பினை மேற்கொண்ட போது , அதீத இரத்த பெருக்கு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதீத இரத்த பெருக்கே உயிரிழப்புக்கு காரணம் என மரண விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here