நடிகர் விஜய் தகாத செயலில் ஈடுபட்டதாக முறைப்பாடு..!

தமிழக நடிகரும், அரசியல்வாதியுமான விஜய், கல்வி விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில், மாணவிகளை அணைப்பது, அனுமதியின்றி தொடுவது போன்ற தகாத செயலில் ஈடுபட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

கிருஸ்ணகிரி மாவட்ட சிறுவர்கள் நலக் குழுவிடம், வேல்முருகன் தலைமையிலான தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகி இது தொடர்பில் முறையிட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற கல்வி விருது வழங்கும் விழாவில், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை அழைத்து அவர்களுக்கு விஜய் பரிசு வழங்கினார்.

இதன்போதே, விஜய் மாணவிகளுடன் நடந்து கொண்ட விதம் குறித்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விஜய்யின் இந்தச் செயல், சமுதாயத்தில் பெண் பிள்ளைகளைத் தொடுவது தவறில்லை என்கிற தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்பதால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்ய வேண்டும் என, முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles