ஹொட்டல்களில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்படுவதற்கு முடிவு : பிரித்தானிய அரசு திட்டம்..!

புகலிடக் கோரிக்கையாளர்கள் ஹொட்டல்களில் தங்கவைக்கப்படும் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர பிரித்தானிய அரசு திட்டமிட்டு வருகிறது.

2029வாக்கில் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஹொட்டல்களில் தங்கவைக்கப்படுவது முடிவுக்குக் கொண்டுவரப்படும் என பிரித்தானிய சேன்சலரான ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.

அதனால், பிரித்தானிய அரசுக்கு ஆண்டொன்றிற்கு ஒரு பில்லியன் பவுண்டுகள் மிச்சமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செலவுகளைக் குறைப்பது தொடர்பிலான தனது திட்டம் குறித்து விளக்கியுள்ள ரேச்சல், புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் தேங்குவதை குறைப்பது, மேல்முறையீடுகளை விசாரிப்பதை அதிகரிப்பது மற்றும் பிரித்தானியாவில் தங்க உரிமை இல்லாதவர்களை திருப்பி அனுப்புவது போன்ற விடயங்களுக்காக, அரசு 200 மில்லியன் பவுண்டுகள் செலவிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுபடகுகள் மூலம் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவது மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக அரசு கட்டிடங்களை கட்டுவது போன்ற நடவடிக்கைகள் மூலம் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஹொட்டல்களில் தங்க வைக்கப்படுவது முடிவுக்குக் கொண்டு வரப்படும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles