இந்தியாவின் அகமதாபாத் நகரில் விபத்துக்குள்ளான எயார் இந்தியா விமானத்தை இயக்கிய விமானி சில மாதங்களில் வேலையிலிருந்து ஓய்வுபெறவிருந்தார் என தெரியவந்துள்ளது.

அனுபவசாலியான 60 வயது கேப்டன் சுமீத் சபர்வால் 82 வயதுத் தந்தையுடன் கூடுதல் நேரம் செலவழிக்க எண்ணியிருந்தது.

வேலைக்குச் செல்லும்போதெல்லாம் தந்தையைக் கவனித்துக் கொள்ளும்படி அவர் சொல்லிவிட்டுச் செல்வார். இப்போது தந்தையின் நிலை என்ன? என விமானியின் அண்டைவீட்டுக்காரர் தெரிவித்துள்ளார்.

கிளைவ் குந்தர் என்பவர் விமானப் பயணத்தில் விமானி சக விமானியாக செயற்பட்டுள்ளார்.

குந்தரின் சகோதரியும் பெற்றோரும் ஆஸ்திரேலியாவில் உள்ளனர். அவரின் தாயார் முன்பு விமானச் சிப்பந்தியாகப் பணியாற்றியவர்.

நேற்று முன்தினம் லண்டனுக்கு விமானம் புறப்பட்டபோது கேப்டன் சபர்வால் சில நொடிகளுக்குள் “mayday call” என்கிற அவசர உதவிக்கான அழைப்பை விடுத்தார்.

விமானம் பின்னர் விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த 242 பேரில் ஒருவர் மட்டும் உயிர்தப்பியதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here