இப்பொழுதுதான் ஜெயம் ரவிக்கு கொஞ்சம் கொஞ்சமாக நல்லது நடக்க ஆரம்பித்து உள்ளது, ஆனால் அதற்குள்ளேயும் அவர் எல்லை மீறி சென்றுவிட்டார்.

கடந்த நான்கு மாதத்திற்கு முன் ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதியினர் விவாகரத்து பேச்சு தான் மொத்த கோடம்பாக்கத்திலும் பரபரப்பாக ஒலித்துக் கொண்டிருந்தது.

இந்த கஷ்டத்திற்கு நடுவே ஜெயம் ரவி நியூமராலஜி பார்த்து தன்னுடைய பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். அதன் பின்னர் தொடர்ந்து பல அதிரடி முடிவுகளை எடுத்து படத்திலும் நடித்து வந்தார். பராசக்தி படத்தில் முதல் முதலாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனுக்கு எதிராக நடிக்கிறார்.

இப்படி இவரது சினிமா கேரியர் போய்க்கொண்டிருக்கும் பொழுது. மாடல் அழகி கென்னிஷாவுடன் டேட்டிங் உறவில் இருந்து வந்தார். இதுதான் இவரது விவாகரத்துக்கு ஆரம்ப புள்ளியாக அமைந்தது. இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வர ஆரம்பித்தது. ரவி மோகன் மற்றும் கென்னிஷா இருவரும் ஜோடியாக வெளியில் தலை காட்ட ஆரம்பித்தனர்.

இது அவரது குடும்பத்திற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவாவில் தன்னுடைய புது காதலியுடன் சுற்றி திரிந்தார். இப்பொழுது புலிவாலை பிடித்த கதையாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் எனவும் அதற்கு பெயரிட்டுள்ளார்.

ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகன், அண்ணன் மோகன் ராஜா இவர்கள்தான் ரவியின் சினிமா கேரியருக்கு அடித்தளம் போட்டவர்கள், இவர்கள் விருப்பம் இல்லாமல் இப்பொழுது பல காரியங்களை செய்து வருகிறார். தன்னுடைய புது தயாரிப்பு நிறுவனத்தில் எஸ் ஜே சூர்யாவுடன் இணைந்து ஒரு படம் பண்ணுகிறார். அதுவும் போக யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கவும் போகிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here