டுபாய் – மெரினாவில் உள்ள 67 மாடிக் கட்டடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த தீ விபத்து தொடங்கியதைத் தொடர்ந்து, அடுக்குமாடிக் குடியிருப்புகளிலிருந்து 3,820 குடியிருப்பாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
சுமார் ஆறு மணி நேரத்துக்குள், சிவில் பாதுகாப்புக் குழுக்களால் தீ அணைக்கப்பட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
