இன்று முதல் ஜாக்பாட் அடிக்கப்போகும் 6 ராசிகள் : உங்கள் ராசி உள்ளதா…?

ஜோதிட சாஸ்திரப்படி ​​சனி குரு, சூரியன் மற்றும் சுக்கிரனுடன் ஜாதகத்தின் உச்சியில் சஞ்சரிப்பதால், சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் உருவாகஉள்ளது. இது ஒரு வகையான ‘பிரபல’ யோகம் என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படியாக, இந்த மாதம் 15ஆம் முதல் இரண்டு மாதங்களுக்கு குறிப்பிட்ட சில ராசிகளுக்கு தொட்டது எல்லாம் பொன்னாகும் காலம் ஆகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்க உள்ளது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு எந்த ஒரு காரியமும் தடைகள் இல்லாமல் மிகவும் எளிமையாக நடக்கும் காலகட்டமாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும். திருமண யோகம் தேடி வரும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் மிக பெரிய முன்னேற்றம் காத்திருக்கும் காலம் ஆகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு புதிய நட்புகளின் அறிமுகத்தால் நன்மைகள் நடக்கும். சமுதாயத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். தொழில் செய்யும் இடத்தில் உங்களுக்கான லாபம் அதிகரிக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும் வாய்ப்புகள் உள்ளது. சிலருக்கு பிரபலங்களின் அறிமுகங்கள் கிடைக்கும். சமூக சேவையில் ஈடுபாடு செலுத்துவீர்கள். வருமானம் முன்பை விட அதிக அளவில் கிடைக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு மனதில் உள்ள சங்கடம் விலகும் காலகட்டம் ஆகும். உங்களின் செல்வாக்கு உயரும் காலகட்டம் ஆகும். சிலருக்கு உயர் அதிகாரிகளின் வழியாக ஆதாயம் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உருவாகும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு உடல் நிலையில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் இருக்கும். வியாபாரத்தை விரிவு செய்வதை பற்றிய எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை செலுத்துவார்கள். வண்டி வாகனம் யோகம் உருவாகும்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles