ஜியோஹாட்ஸ்டாரில் ரேவதி இயக்கத்தில் பிரியாமணி நடித்துள்ள “குட் வொய்ஃப்” சீரிஸின் டீசர்..!

ரேவதி இயக்கத்தில் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாக இருக்கும் ‘குட் வைஃப்’ தொடரின் டீசரை வெளியிட்டுள்ளது.
இது சமூகவலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ‘குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம்.
தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இந்தத் தொடரை நடிகை-இயக்குநர் ரேவதி இயக்கியுள்ளார்.
இதன் மூலம் இயக்குநராக ரேவதி ஓடிடியில் அறிமுகமாகிறார்.
இதே சீரிஸ் இந்தியிலும் ‘தி டிரையல்- பியார், கணூன், தோகா’ என்ற பெயரில், நடிகர்கள் கஜோல் மற்றும் ஜிஷூ சென்குப்தா நடிப்பில் உருவானது.
இது ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி வெற்றிப்பெற்றது. இப்போது தமிழ் ரசிகர்ளுக்கு ஏற்றபடி இந்த தொடர் உருவாகியுள்ளது.
ஓடிடி-யில் இயக்குநராக அறிமுகவாது குறித்து நடிகை- இயக்குநர் ரேவதி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதாவது:-
இந்தி ரீமேக்கில் ‘குட் வொய்ஃப்’ வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து தமிழில் இதனை இயக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இந்தக் கதையில் கதாநாயகி கதாபாத்திரம் மிகவும் வலுவானது.
தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் தொழில் சார்ந்தும் நிறைய சவால்களை அவர் எதிர்கொள்கிறார்.
இதனை திரைக்கதையில் இருந்து படமாக்குவதை மிகவும் விரும்பி செய்தேன். பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் போன்ற திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ஜியோஹாட்ஸ்டார் மற்றும் பானிஜே ஆசியாவுடன் ஓடிடி உலகில் நான் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சிகரமான அனுபவம்
கிருஷ்ணன் குட்டி, ஹெட் ஆஃப் கிளஸ்டர், எண்டர்டெயின்மென்ட் (சவுத்) ஜியோஸ்டார், “தமிழ் ரசிகர்களுக்கு ‘குட் வொய்ஃப்’ சீரிஸை வெளியிட ஆர்வமாக இருக்கிறோம்.
இதன் இந்தி வெர்ஷனான ‘தி டிரையல்- பியார், கணூன், தோகா’ பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தமிழிலும் அப்படியான வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம்.
உயர்தர தொழில்நுட்பம், என்கேஜிங்கான கண்டெண்ட், ரேவதி போன்ற இயக்குநர், ப்ரியாமணி, சம்பத் ராஜ் போன்ற நடிகர்கள் மற்றும் பனிஜய் ஆசியா ஆகியோருடன் இணைந்து நல்ல படைப்பை பார்வையாளர்களுக்குக் கொடுக்க இருக்கிறோம் என்ற நம்பிக்கை உள்ளது
தீபக் தார், ஃபவுண்டர் & குரூப் சிஇஓ, பானிஜே ஆசியா& எண்டேமோல்ஷைன் இந்தியா பகிர்ந்து கொண்டதாவது, “‘குட் வொய்ஃப்’ சீரிஸின் இந்தி வெர்ஷனான ‘தி டிரையல்- பியார், கணூன், தோகா’ பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தக் கதையை தமிழிலும் கொண்டு வர ஆர்வமாக இருக்கிறோம். பானிஜே ஆசியா தென்னிந்தியாவை முக்கிய சந்தையாக கருதுகிறது. இங்கு தரமான உள்ளடக்கம் கொடுப்பதற்கும் ஆர்வம் காட்டுகிறது.
அதற்கான முதல்படியாக ‘குட் வைஃப்’ இருக்கும். தரமான கதைகளைத் தொடர்ந்து கொடுத்து வரும் ஜியோஹாட்ஸ்டாருடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.
actress,priyamani ,Revathi

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles