பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 ஆம் திகதியை “உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினம்” என்று அறிவித்துள்ளது.

இதற்கு இணையாக, கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட தேசிய முதியோர் செயலகம், முதியோர் சமூகத்தினருக்காக “சரணா” என்ற ஆதரவு சேவையைத் தொடங்குகிறது.

தமது பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்க, முதியோருக்கான தேசிய செயலகம், வாட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான தகவல்களை 070- 7898889 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு வழங்க முடியும்.

இந்த நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில், கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே மற்றும் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோரின் தலைமையில் நேற்று அமைச்சின் வளாகத்தில் இந்த வாட்ஸ்அப் எண் உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, மேலதிக செயலாளர் ஹேமா பெரேரா, தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிஹிதும் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் குழு கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles