மகனின் திருமணம் 2வது முறையாக இரத்து செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கவலை வெளியிட்டுள்ளார்.

“எனது மகன் அவ்னர், ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக இரண்டாவது முறையாக தனது திருமணத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தது.

இது அவருக்கும், அவரது வருங்கால மனைவிக்கும், எங்கள் குடும்பத்திற்கும் பெரும் தனிப்பட்ட இழப்பாகும்” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

ஈரானிய ஏவுகணை தாக்குதலால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று காலை சோரோகா மருத்துவமனையில் ஈரானிய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“ஈரானிய ஏவுகணை தாக்குதல்களால் அனைத்து இஸ்ரேலியர்களும் விலை கொடுத்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களும், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து துயரத்தில் ஆழ்ந்த குடும்பங்களும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்தப் போரின் விளைவுகள் தனது குடும்பத்தையும் பாதித்ததாக நெதன்யாகு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here