மமிதா பைஜு பிறந்தநாளை முன்னிட்டு Dude படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியீடு

லவ் டுடே, டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.
டிராகன் திரைப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடிக்கிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சில மாதங்களுக்கு முன் நடைப்பெற்றது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
இந்நிலையில் படத்தின் நாயகியான பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்து சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
படத்தில் குறள் என்ற கதாப்பாத்திரத்தில் மமிதா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது என படக்குழு அறிவித்துள்ளது.
இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles