விபத்தையடுத்து ஏர் இந்தியா விமான முன்பதிவுகளில் கடும் வீழ்ச்சி

உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில், தமது பயண அனுமதிச்சீட்டு முன்பதிவு, சுமார் 20 சதவீதத்தினால் குறைந்துள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அஹ்மதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தை அடுத்து, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதன்படி, உள்நாட்டு வழித்தடங்களில் ஏர் இந்தியா விமான அனுமதி பயணச்சீட்டு முன்பதிவு 10 முதல் 12 சதவீதம் வரையும், சர்வதேச வழித்தடங்களில் ஏர் இந்தியா விமான அனுமதி பயணச்சீட்டு முன்பதிவு 18 முதல் 22 சதவீதம் வரையும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஏர் இந்தியா விமான பயணக்கட்டணம் 8 முதல் 15 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக, அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன், குறித்த விமான பயணச்சீட்டுக்களை இரத்து செய்வதும் 15 முதல் 18 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக, ஏர் இந்தியா விமான சேவைகள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles