Monday, February 2, 2026
HomeMain NewsAmerica3 ஈரானிய அணுச்சக்தி தளங்களை அமெரிக்க இராணுவம் தாக்கியதாக டிரம்ப் அறிவிப்பு

3 ஈரானிய அணுச்சக்தி தளங்களை அமெரிக்க இராணுவம் தாக்கியதாக டிரம்ப் அறிவிப்பு

3 ஈரானிய அணுச்சக்தித் தளங்களை அமெரிக்கா தாக்கியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுவாயுதத் திட்டத்தை முறியடிக்கும் இஸ்ரேலின் முயற்சியில் அமெரிக்கா சேர்ந்துள்ளது.

போர்டோ, நட்டான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராய்ட்டர்ஸின் தகலுக்கமைய, ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களில் B-2 குண்டுவீச்சு விமானங்களும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அமெரிக்காவின் B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் அமெரிக்காவின் குவாம் தீவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவை ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற ஊகங்களும் எழுந்துள்ளன.

தாக்குதலுக்குப் பிறகு, டிரம்ப், ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில், அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக வீடு திரும்புவதாகவும், இப்போது அமைதிக்கான நேரம் என்றும் கூறினார்.

இதற்கிடையில், ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து டிரம்ப் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular