சீனாவில் பெண்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

சீனாவில் பெண்களை விட 30 மில்லியன் ஆண்கள் அதிகமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

பெண்களின் எண்ணிக்கை குறைந்தமையினால் திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை அங்கு அதிகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவின், ஒரு குழந்தை கொள்கையின் பின்விளைவுகளே இதுவென கூறப்படுகிறது.

1980 ஆம் ஆண்டு மக்கள் தொகை ஒரு பில்லியனை நெருங்கியபோது சீன அரசாங்கத்தால் இந்தக் கொள்கை நிறுவப்பட்டது.

அதிகமான மக்களைக் கொண்டிருப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்ற அச்சத்தின் மத்தியில் இந்த கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் குறித்த திட்டம் தற்போது திருமணத்தில் தாக்கம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் குறித்த திட்டத்தின் விளைவாக மிகப்பெரிய பாலின ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது.

சீனா, இப்போது அதன் வீழ்ச்சியடைந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் வயதான மக்கள் தொகை குறித்து மிகவும் கவலை கொண்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles