வருகிறது “சிக்கிடு”..! கூலி படத்தின் First Single ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் “சிக்கிடு” வைப் பாடலின் ப்ரோமோ வீடியோ என அனைத்தும் இணையத்தில் வைரலானது.

தொடர்ந்து, கூலி படத்தின் அப்டேட்டை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

அதேபோல், சிக்கிடு பாடலின் மியூசிக் வீடியோ வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, சிக்கிடு மியூசிக் வீடியோ வரும் 25ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles