ஈரான் இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்தில் உடன்பாடு எதுவுமில்லை என ஈரான் அறிவிப்பு

ஈரான் இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏதும் செய்துகொள்ளவில்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறியுள்ளார்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு முன்பாக இஸ்ரேலியப் படைகள் அவற்றின் தாக்குதல்களைக் கைவிட்டால் மேற்கொண்டு தாக்குதல் நடத்தும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசம் முடிவடைந்த பிறகே ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து ஈரான் முடிவெடுக்கும் என்று அப்பாஸ் தெரிவித்தார்.

இஸ்ரேலே தாக்குதலை ஆரம்பித்தது ஈரான் இல்லை என்பதை ஈரான் மீண்டும் மீண்டும் தெரிவித்து வந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுவரை யுத்த நிறுத்தம் தொடர்பிலோ மோதல் நிறுத்தம் தொடர்பிலோ எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை,என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles