அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் போர் விமானங்களை வாங்க இங்கிலாந்து முடிவு

இங்கிலாந்து அரசாங்கம் அணு குண்டுகள் பொருத்தக்கூடிய 12 புதிய போர் விமானங்களை வாங்கி, நேட்டோவின் வான்வழி அணுசக்தி நடவடிக்கையில் இணைய உள்ளது.

இது “ஒரு தலைமுறையில் இங்கிலாந்தின் அணுசக்தி நிலைப்பாட்டை மிகப்பெரிய அளவில் வலுப்படுத்துவதாக” டவுனிங் ஸ்ட்ரீட் கூறுகிறது.

புதிய F-35 A ஜெட் விமானங்களால் வழக்கமான ஆயுதங்களை ஏந்திச் செல்ல முடியும், அத்துடன், அணு குண்டுகளையும் அதில் பொருத்த முடியும்.

இந்த வாரம் நெதர்லாந்தில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில், “இங்கிலாந்தின் அணுசக்தி நிலைப்பாட்டை மிகப்பெரிய அளவில் வலுப்படுத்துவது” குறித்து பிரதமர் அறிவிக்க உள்ளார்.

அதே நேரத்தில், பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பிலான இங்கிலாந்தின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தவுள்ளார்.

சர் கெய்ர் ஸ்டார்மர் 12 புதிய போர் விமானங்களை வாங்குவதாக அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் பாதுகாப்பு செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% ஆக உயர்த்த இங்கிலாந்து அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது.

இந்த நிலையில், 12 F35A ஜெட் விமானங்கள் மூலம் நேட்டோவின் வான்வழி அணுசக்தி பணியில் இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக இணையும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles